Sunday, November 29, 2009

குடிப்பழக்கத்தை தூண்டும் புரதம்: மாற்று மருந்து கண்டுபிடிக்க வழி

குடிப்பழக்கத்தை தூண்டும் புரதம்: மாற்று மருந்து கண்டுபிடிக்க வழி
lankasri.comமதுப்பழக்கம், அது சார்ந்த நோய்க்கு ஆளானோருக்கு மூளையில் ஏற்படும் மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதன் மூலம் குடிப்பழக்கத்தை கைவிடச் செய்யும் புது வாய்ப்பு உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர், குடிப்பழக்கம் இல்லாதோரின் உடல்களின் மூளைப்பகுதி, பிரேத பரிசோதனையின் போது ஆய்வு செய்யப்பட்டது.

இதில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர், அதனால் நோய் ஏற்பட்டோரின் மூளைப்பகுதியில் பீட்டா-காடனின் என்ற புரதப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தான், குடிப்பழக்கத்துக்கு மூளையில் உள்ள செல்களை தூண்டுகிறது.


அதிகளவில் மது அருந்தும், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரின் மூளைப்பகுதியில் இந்த புரதப்பொருள் அதிகளவில் இருப்பதும், குடிப்பழக்கம் இல்லாதோருக்கு, இவை மிகக்குறைவாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குடிப்பழக்கத்துக்கு தூண்டுவதற்கு இந்த புரதப்பொருள் தான் முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது எளிதாகி உள்ளது

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails