Sunday, November 29, 2009

மது எனும் புதைகுழி,

மது எனும் புதைகுழி,





ராஜ்குமார், ஒரு லாரி டிரைவர். நண்பர்களின் சகவாசத்தால் தொற்றிக் கொண்ட குடிப்பழக்கம், காலையில் கண் விழித்ததும் மதுவை தேட வைத்தது. மது அருந்தாவிட்டால், கைகளில் கடும் நடுக்கம். குடிபோதையில் என்ன செய் கிறோம் என்பதே தெரியாது. விபச்சாரிகளுடனும் சகவாசம் ஏற்பட்டது. விளைவு: ஆட்கொல்லியான எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொண்டு விட்டது.


சொந்த குடும்பமே ஒதுக்கி வைத்தாலும், இவரைப் போல வாழ்க்கையை தொலைத்தவர்கள் அன்பு காட்டினர். குடிப்பழக்கத்தை கைவிட்டு, நேர்மையான வாழ்க்கைக்கு திரும்பினார். தான் சம்பாதிப்பதில் தன் தேவைகள் போக, மீதித் தொகையை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறார்.


*குடும்பம், உறவினர், நண்பர்கள், அலுவலக சகாக்கள் என, அனைவராலும் வெறுத்து ஒதுக்கப் பட்டவர் நிர்மல். 20 ஆண்டுகாலம் அவரை ஆக்கிர மித்து இருந்த குடிப்பழக்கம், இப்போது அறவே அவரிடம் இருந்து விலகிவிட்டது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க முடிகிறது. 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தவர், அதற்கெல்லாம் சேர்த்து வைத்ததைப் போல, இப்போது கடுமையாக உழைக்கிறார். வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டதை உணர்கிறார்.


*அவர் பெயர் கண்ணன். கல்லூரிக் காலத்தில் கைநிறைய பணப்புழக்கம். தேவைக்கு அதிகமான பணம், அவருக்கு சேரா நட்பை தேடித் தந்தது. நண்பர்கள் அறிமுகப்படுத்திய குடிப்பழக்கம், அவரை அடிமையாக்கி விட்டது. திருந்தி விடுவார் என்று திருமணம் செய்து வைத்தார் தந்தை. மூச்சுக்காற்றில் கூட மதுவின் நெடி. அவரை நெருங்க விடாத மனைவி, தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள்.


குடிப்பதற்கு பணம் இல்லாத போது, சொந்த வீட்டிலேயே திருடத் துவங்கினார். நாள் முழுவதும் போதை ஏற்றிக் கொள்ள பணம் போதவில்லை. அலுவலகத்தில் கையாடல் செய்து சிக்கிக் கொண் டார். ஒரு மாத சிறைவாசத்தில், அனுசரணை கிடைத் தது. குடிப்பழக்கம் அவரிடம் இருந்து விலகியது. என்றாவது ஒரு நாள் தன் மனைவி திரும்ப வருவாள் என்று காத்திருக்கிறார் கண்ணன்.



அமெரிக்காவை சேர்ந்தவர் பில். இவர், ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், பணி யில் கவனம் செலுத்த முடியவில்லை; குடும் பத்தையும் கவனிக்க முடியவில்லை. குடிப்பழக் கத்தை கைவிட பெரும் முயற்சி எடுத்தார்; முடியவில்லை. வில்லியம் சில்க் ஒர்த் என்ற மனநல மருத்துவரிடம் சென்றார். குடிப்பழக்கத்தை நிறுத்து வதற்கு உதவி கோரினார். ஆறு ஆண்டுகள் போராடி யும், குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை


இவரைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் டாக்டர் பாப். அறுவை சிகிச்சை நிபுணர். குடிப்பழக்கம் இருந்தாலும், மருத்துவத் தொழிலில் பெரும் கில்லாடி. குடிக்காமல், அவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது; கைகள் நடுங்கும்.


குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் குடிக்கும் ஆவல் எழும் போது, இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

contact-al-shifa deaddcition centre-9688778640

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails