Friday, December 18, 2009

our add

our clinic add

Thursday, December 17, 2009

புகை மற்றும் போதை பழக்கமானது

நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு தற்போது பலருக்கு பல உள் மற்றும் புறநோய்களை எளிதாக தந்துக்கொண்டு இருக்கும் புகை பிடிக்கும் பழக்கத்தினை பற்றி கருத்துக்களை நாம் இங்கு காண்போம்.

விசுவாசங்கொண்டோரே..! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி, (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 4:29

புகை மற்றும் போதை பழக்கமானது நம்மை நாமே கொலை செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதினை தான் மிகவும் அழகாக மேற்கண்ட இறைவசனமானது குறிப்பிடுகிறது என்பதினை நாம் அறியலாம். செல்வங்களை தவறான முறையில் செலவு செய்து வீண் விரயமாக்கும் அனைத்து மனிதர்களுக்கும் அச்சமூட்டக்கூடிய அளவிலும் அந்த இறைவசனம் உள்ளது.

அபாயகரமானது என்றும், புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பவர்களின் பக்கத்தில் இருப்பவர்களையும் நோய்க்கு ஆளாக்க கூடியது இப்பழக்கம் தான் என்றால் மிகையாகாது. சிகரெட்டிலிருந்து வெளிவரும் ஒரு வகை நஞ்சானது இருவரையும் எளிதாக தாக்கக்கூடியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுவது என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட பக்கத்தில் இருப்பவர்கள் தான் அந்த கொடிய நஞ்சு கிருமி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

புகை பிடிப்பதால், வாய்புற்றுநோய் இதய நோய் மனஅழுத்தம் மன வேதனை மன கஷ்டம் சிறுநீரக கோளாறுகள் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற இன்னும் பல தொடர்புடைய நோய்கள் வர அதுவே காரணமாகி விடுகின்றன. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தன்னுடைய ஆய்வில் வெளியிட்டு உள்ளது.

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும், எந்த வகையில் பொருள்களை செலவு செய்ய வேண்டும், யாரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனிதகுலம் அனைத்திற்கும் அறிவுரை வழங்கக்கூடியதாகவும் அவர்களை நேர்வழியின்பால் வழி நடத்திச்செல்லக்கூடியதாகவும் திருக்குர்ஆன் உள்ளது.

அவனே வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன் உங்களுடைய இரகசியத்தையும், உங்களுடைய பரகசியத்தையும் நன்கறிவான், இன்னும் (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான்.
திருக்குர்ஆன் 6:3

அல்லாஹுதஆலா மனிதனின் அனைத்து தவறுகளையும் மற்றும் அறியாமைக்காலத்து பாவங்களையும் மன்னித்து அருள் செய்பவன். ஆனால் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்தால் இறைவன் மன்னிக்க மாட்டான். அந்த வரிசையில் புகை பிடித்தலையும், மற்றும் குடிப்பழக்கத்தினையும் கூறலாம்.

புகைக்க, மதுக்குடிக்க செலவிடும் பணத்தினை கொண்டு நல்ல உணவுபொருட்களையும், நல்ல ஊட்டச்சத்தான பழங்களையும் வாங்கி உண்ணலாம். புகை பிடிப்பதால் மனிதனுக்கு என்ன பயன்.? அல்லாஹுதஆலா மனிதனுக்கு கொடுத்த அவனுடைய பணத்தினையும்;, பொன்னான நேரங்களையும் காலங்களையும் இதனால் வீணாக்கிறான். ஒரு சிகரெட்டினை ஊதி தள்ள ஒரு மனிதனுக்கு குறைந்தது ஐந்தோ அல்லது பத்து நிமிடமோ எடுத்துக் கொள்வான். அந்த நேரத்தினை ஏதேனும் பயனுள்ள காரியத்திற்கு எடுத்துக்கொண்டால் அவனுடைய நேரமும் மற்றும் காலமும் பயனுள்ளதாக அமையும்.

சிகரெட் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பல ஆதிக்க சக்தி கொண்ட நிறுவனங்கள் பல நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்களை பல்வேறு சூழ்நிலைகளால் கொலை செய்கிறார்கள். மற்றும் பல கோடிகளை விளம்பரங்களுக்காகவும் மற்றும் பிரசுரங்களுக்காகவும் வீண் விரயம் செய்கிறார்கள். அத்துடன் குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பெருமையாக சிகரெட் அட்டையிலும், மற்றும் மதுபானப்பாட்டிலிலும் போட்டு இருப்பார்கள். போட்டு என்ன பயன்..? முதலில் போதை தரும் எந்த வஸ்துவாக இருந்தாலும் அதனை அந்தந்த அரசாங்கங்கள் உற்பத்தி செய்யவே கூடாது. இதனை அவர்கள் கண்டிப்பாக செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு பொருள் சந்தைக்கு வந்தால் தான் மக்கள் வாங்குவார்கள். சந்தைக்கே வரவில்லை என்றால் எங்கு போய் வாங்குவார்கள். போதை பொருள்களுக்காக செலவு செய்யும் இத்தகைய பணங்களை புற்று நோய் புனரமைப்பு இயக்கத்திற்கும், பல தொண்டு நிறுவனங்களும், குழந்தைகள் நல காப்பங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால் அதன் மூலமாக பலர் பயன் பெறுவார்கள்.

ஆதமுடைய மக்களே..! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால் உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள், ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
திருக்குர்ஆன் 7:31

புகை பிடிப்பதால் பல சாலை விபத்துகள் பலகோணங்களில் ஏற்படுகின்றன. வாகனசெலுத்துபவர்கள் ஸ்டைலாக ஒரு கையில் சிகரெட்.. ஒரு கையில் ஸ்டெரிங் என்ற தோரணையில் வாகனத்தினை ஓட்டுவார்கள். ஆனால் ஒரு நொடியில் மரணம் என்பதினை அவர்கள் எங்கே அறிய போகிறார்கள். சாலை விபத்துகளால் நாட்டில் பல பேர்கள் இறந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதினை ஊடகங்களை படிப்பவர்கள் அறிவார்கள். அத்துடன், மறதியின் காரணமாக புகைபிடிப்பவர்கள் சிகரேட் புகையினை அணைக்காமல் விட்டு விடுவதால் இரவு நேரங்களில் இல்லங்களில் தீ விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பினை உண்டாக்கி விடுகிறது இந்த புகைப்பழக்கம்.

புகைப்பிடிப்பதால் சுற்றுப்புற சூழல் மாசுஅடைகிறது. மாசுக்கள் அதிகமாக படிவதால் தூய்மையான காற்றானது அசுத்தமாக மாறி விடுகிறது. ஒரு வெள்ளைத்துணியினை எடுத்து சிகரெட் புகையினை அதில் ஊதிப்பாருங்கள்.. மஞ்சளாகக் கறை ஒன்று படிந்து போய் இருக்கும். அதைப்போல் புகைப்பிடிப்பவர்கள், புகைப் பிடிப்பதால் இதயத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கறை படிந்து வரும்.

புகைப்பிடிப்பவர்கள், அவர் ஏழையாக இருந்தாலும் ஜகாத் வாங்குவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. ஏனெனில் ஜகாத் என்பது புனிதமான ஒன்றாகவும், ஜகாத் பணத்தினை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுங்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. புகைப்பிடிப்பவனிடமோ அல்லது குடிப்பழக்கம் உள்ளவனிடமோ ஜகாத் பணத்தினை கொடுத்தால் அவன் அதனை குடிக்கவும் மற்றும் புகைக்கவும் பயன் படுத்தி அந்த புனிதத்தினை கெடுத்து விடுவான்.

புகைப்பிடிக்கும் பழக்கமானது 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் என்ற நாட்டிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. அங்கு தோன்றிய இந்த கலாச்சார சீரழிவானது கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்டு மக்களை பிடித்து ஆட்டுகிறது. 100 வருடங்களுக்கு முன்பு வரை தான் இந்த புகைப்பழக்கமானது இஸ்லாமிய நாடுகளை முற்றுகையிட்டது எனலாம்.

தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly - உக்கா) அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை இழுக்கும் பழக்கமானது அரேபியஆண்களிடமும் அரேபியப்பெண்களிடமும் ஒரு கெட்ட பழக்கமாக ஆகி விட்டது. அந்த சிஸாவினை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் அதில் உள்ளன. இதனால் வாய்ப்புற்று நோய்கள் வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனை பற்றித்தெரிந்தும் போதை அதிகம் வேண்டும் என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

வளைகுடா அரசாங்கங்கள் சமீபத்தில், பேருந்து நிலையம், வணிக வளாகம், உணவு விடுதிகள், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிப்பதினை தடை செய்து உள்ளது. மற்றும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்துச்செய்யப்படும் என்றும் கடுமையான சட்டங்களையும் பிறப்பித்துள்ளது.

துரதிஷ்ட்டவசமாக புகை மற்றும் போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கமானது இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நம்முடைய சமுதாயத்தினரை ஆட்க்கொண்டு விட்டது. அல்லாஹ் நாடினால் இனி வரும் நாள்களில் நாம் இத்தகைய சூழ்நிலைக்கு அடிமைப்படாமலும், நம்முடைய சந்ததியினரும் அடிமைப்படாமலும் இறைவன் நம்மை பாதுகாத்து அருள வேண்டும்.

STUB OUT THOSE CIGARETTES, PLEASE..!



Do not kill yourself. Allah is Merciful unto you
(4:29)

The dangers of cigarette and even ‘Shisha’ smoking are undeniable. Tobacco smoke affects both the smoker and the people around them who cannot escape the toxic plumes as they exit the smoker’s lungs. New research ahs proven that second-hand smoke is often more deadly then actually smoking cigarettes first- hand. Second hand smoke is a carcinogen and is equivalent to other deadly carcinogens like Arsenic and Radon. Some of the disease caused by smoking cigarettes include lung cancer, respiratory disease, infertility, cancers of the mouth, emphysema, tuberculosis, hypertension, heart disease and a slew of kidney disease. As with all human affairs, the Holy Quran serves as a guide for all humans throughout all the ages. And the vice of smoking tobacco is no exception.

Allah Almightly says in the Holy Quran: .. he allows them as lawful At Tayyibaat (that is, all good and lawful as regards things, deeds, belief, persons and foods), and prohibits them as unlawaful as regards things, deeds, beliefs, persons and foods).

Allah forbids humans all things, which can harm us or others like tobacco smoking, illicit drugs or alcohol. Humans are allowed things, which are lawful and of benefit to us like fresh foods and medicines that can cure us from infections etc.,

Smoking tobacco is of no benefit to humans. It is a waste of time and money. It is harmful to our bodies. It is harmful to those around us. The cigarette industry is responsible for generating billions of dollars worth of income per annum. Just imagine if that money were allocated for something else like cancer research or the World Food Program. By eliminating this one single vice, we could eradicate several harmful by products of like in this workd in one fell swoop! Clearly. The only way smoking can benefit society is if it is wiped out once and for all.

Islam also forbids extravagance in all of our affairs. The Muslim should lead a life a simplicity in humbleness to Allah for his boutry. Sitting around in a “Shisha” bar smoking while trading gossip until the wee hours of the morning, for example, is a luxury that many a Muslim indulges in on a daily basis.

Allah Almighty says in the Holy Quran : .. “and eat and dring but waste not by extragance, certaily He (Allah) like s not Al Musrifoon (those who waste by extravagance) “ (7:31)

Tobacco smoking is also an unnecessary distraction. How many car accidents have been caused because the driver was busy puffing on his cigarette while trying to steer with one hand? How many homes have been burnt to the ground because some one fell asleep with a cigarette in his or he mouth or left a lit “butt” unattended? Smoking is an evil vice that has often led man into desperation and despair. Smoking is not worth losing your health or your wealth.

The Islamic viewpoint is so strict about smoking that smoker are not allowed to receive Zakat, or poor alms. If the smoker can afford cigarettes and manage to waste what little money the have on them then they are ineligible to receive poor alms for food and other essentials.

Tobacco smoking has absolutely no basis in Islam. Historically, it is not even a part of the Muslim world. The Spanish discovered it more than 500 years ago and the filthy habit only reached the Muslim world 100 years after the initial discovery. Unfortunately, many Muslims are afflicted with an unhealthy addiction to smoking. It is only thought true repentance and supplication to Allah that this unhealthy habit can be kicked once and for all. Forget about expensive nicotine patches, pills or even anti-smoking gum. Trust in Allah to break free from the “butt”!

புகை பிடிப்பதால் என்ன நன்மைகள்

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

  • பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
  • நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
  • நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
  • சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
  • சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
  • சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
  • எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
  • சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
  • பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
  • சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
  • அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
  • தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.
  • இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
  • வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
  • எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
  • வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
  • புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
  • மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
  • சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
  • வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
  • சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.
  • வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
  • மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
  • சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
  • நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.


Thursday, December 10, 2009

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

நெருப்பு வைத்து தன்னை அழித்தவனை
பழிவாங்கியது சிகரெட்
கான்சர் வடிவில்"

என்கிறது ஒரு புதுக்கவிதை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று நன்கு அறிந்திருந்தும், பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர். மிகவும் நல்ல மனிதர். நன்கு படித்தவர். பற்பல நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறவர். ஆயினும், எப்படியோ புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டு, அதைக் கைவிட முடியாமல் தவிப்பவர். நான் "ஏன் இப்படிப் பணத்தையும் செலவு செய்து உடம்பையும் கெடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் படித்தவர், புகையின் தீமைகள் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்பது வழக்கம். "என்ன செய்வது? என் வேலையின் காரணமாக எனக்கு மன அழுத்தமும் இறுக்கமும் அதிகம். புகை பிடிப்பதால் இறுக்கம் தணிகிறது. அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. " என்றெல்லாம் நொண்டிச் சாக்கு சொல்வார் அவர். கடைசியில், தொண்டையில் புற்றுநோய் தாக்கிவிட்டது. சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் போல் இப்பழக்கத்திற்கு என்னென்னமோ காரணம் சொல்லி, கடைசியில் அவதியில் சிக்கிக்கொள்ளும் எத்தனையோ மனிதர்களுக்காகவே இந்தக் கட்டுரை.

cigaretteபுகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.புகைப்பழக்கத்திற்கு ஆதரவாகவும் ஏதேனும் தகவல் தெரிவித்து, அது ஒன்றும் அவ்வளவு கெடுதலில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முயலுவார்கள். பொதுவாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு, சில காரணங்கள் உள்ளன.
1. அது அந்தஸ்தைக் காட்டுவதாக / துணிச்சலைக் காட்டுவதாக ஒரு தவறான எண்ணம் பலர் மத்தியில் நிலவுதல்
2. அதிகக் கவலை அல்லது மன உளைச்சலின் பொழுது, புகை பிடித்தால், புகையில் உள்ள நிகோடின் என்ற பொருள் (நச்சுப்பொருள்) இறுக்கம் மறைய உதவுகிறது. நாம் அதிக வேலைப்பளுவின் பொழுது காபி அல்லது டீ அருந்துவதும் இதே காரணத்திற்காகத்தான்.
3. தம் பெற்றோர் அல்லது மனைவியிடம் எதிர்ப்புணர்வைக்காட்டும் பொருட்டு சிலர் இப்பழக்கத்தைக் கைக்கொள்கின்றனர்.
4. புகை பிடிக்கும் நண்பர்களைத் திருப்தி செய்ய சிலர் தொடங்கி, தாமும் இவ்வலையில் வீழ்ந்து விடுகின்றனர்.
5. புகை பிடிப்பதன் மூலம், எதையோ சாதித்த திருப்தி சிலருக்குக்கிடைக்கிறது
6. சிலரோ, புகை வளையங்கள் காற்றில் கரைகையில், தமது கவலைகளும் கரைந்து விடுவது போல் உணர்வதால், தாம் புகை பிடிப்பதாக் கூறுகின்றனர்.

இவை எல்லாம் மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. புகை பிடிக்காதவர்கள் இவையெல்லாம், அசட்டுத்தனமான, வெற்றுச் சமாதானங்கள் என்பதை நன்கறிவர். உண்மையில் புகை பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

1. சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்கள் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. புகை பிடிக்காதவர்கள், இந்த துர்நாற்றத்தின் காரணமாகவே இவர்களை விட்டு விலக நேரலாம்.
2. மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன
3. தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.
4. புகை பிடிக்கப் பிடிக்க, இன்னும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் (urge) தோன்றும். இதனால், சங்கிலித்தொடர் போல புகைக்கத் தொடங்கிவிடுவர். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப் புகைக்காவிடில், உடல் சோர்வும், தலைசுற்றலும் கூட ஏற்படலாம்.
5. உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருக்கும் அளவு மாறிவிடும். விரல் நுனிகளும் சிலருக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
6. அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேக்சும் தடைபடும்.
7. நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
8. புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
9. சளித்தொல்லை, ஆஸ்த்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும்.
10. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால், நாளடைவில் உணவின் மீது நாட்டமானது குறையத்தொடங்கும்.
11. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
12. உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கையில், சில மருந்துகள் உடலில் வினைபுரிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர், புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் அவர் நிலை தேறவில்லை. அப்பொழுது, ஒரு மருத்துவர் கூறிய தகவல் இது.

இவை எல்லாம் உடல் நலத்திற்கு ஏற்படும் சில கேடுகள். இவையும் தவிர, சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா? அது மட்டுமல்ல, அவர்கள், தாம் பணிபுரியும் அலுவலகத்தின் உள்ளே புகைக்க இயலாது என்பதால், அடிக்கடி, வெளியில் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பணிகள் தாமதமாகின்றன. மேலதிகாரிகளின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடுகிறது. ஒரு சிகரெட் புகைக்க ஐந்து நிமிடங்கள் தேவைப்படுவதாகக் கொண்டால், ஒரு நாளைக்குப் பத்து சிகரெட் பிடிப்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்தை வீணடிக்கின்றனர். கால இழப்பு, மற்றெல்லா இழப்பையும் விடப் பெரியது. ஆமாம்தானே?

மேலும் ஒரு முக்கியமான கேடு புகை பிடிப்பதால் விளைகிறது. புகை பிடிப்பவர்களை 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) என்கிறோம். இவர்கள் புகைக்கையில் பக்கத்தில் இருக்க நேரிடுபவர்களும் அப்புகையினைச் சுவாசிக்க நேரிடுகிறது.இத்தகையவர்களை ' மறைமுகப் புகைப்பாளர்' (Passive Smokers) என்று அழைக்கிறோம். 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) பிடிக்கும் புகையால் இவர்களுக்கு, இருமல், சளித்தொல்லை, புற்றுநோய் எல்லாம் ஏற்பட எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ அதே அளவு 'Passive Smokers' ஆகிய புகைபிடிக்காத அப்பாவிகளுக்கும் உண்டு. தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் இப்பழக்கத்தை விடுவதும் அவ்வளவு எளிதானதன்று.

உண்மையில் சொல்லப் போனால், எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால், புகைப்பதை விட்டு விட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விடுவது இயலக் கூடிய ஒன்று மட்டுமல்ல, இது கண்டிப்பாகக் கைவிடவேண்டிய ஒரு தீய பழக்கம்.

புகைத்தலைப் பற்றி ஆராய்ச்சி

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.

நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.

புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !

நீங்கள் புகை பிடிப்பவரா

கிழே உள்ள படங்களை ஒரு முறை பாருங்க. அதுக்கு அப்புறமும் புகை பிடிக்க முடிந்தால் பிடியுங்கள்.

என்ன சொல்ல ..............


அன்பானவ்ருடனான நேரத்தை எப்படி குறைக்குது பாருங்க


இதுக்கு அப்புறமும் பிடிக்க தோணுதா?


இதுவே உங்க குழந்தையா இருந்தா?


புகை மத்தவனையும் பாதிக்கும் போது...............


இப்ப சொல்லுங்க........புகை பிடிப்பிங்கள?


இதுக்கு என்ன அர்த்தம்?


இது புல்லட்டை விட வேகம் கம்மி தான் ஆனா செயல் ஒன்று தான்


சொல்றத்துக்கு ஒன்னும் இல்லிங்க


இது எப்படி இருக்கு.


எவ்வளவு வேணுமுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க .


உண்மை படம் தாங்க.


அச்சசோ இப்படியா?


Last but not least

Related Posts with Thumbnails